சிறையில் இருந்து தப்பியவருக்கு காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி!
21 தை 2026 புதன் 16:12 | பார்வைகள் : 608
சிறையில் இருந்து தப்பி தலைமறைவாகியிருந்த கைதி ஒருவர், பாலியல் வல்லுறவு குற்றத்தில் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
46 வயதுடைய ஒருவர் கடந்த 17 ஆம் திகதி Maisons-Alfort (Val-de-Marne) நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்றின் மேல்தளத்தில் வைத்து பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் ஏற்கனவே தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி எனவும், அவர் சில ஆண்டுகள் முன்னர் சிறைச்சாலையில் இருந்து தப்பித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan