தாவரங்கள் சுவாசிக்கும் முதல் ஆதாரம் - விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு
21 தை 2026 புதன் 09:52 | பார்வைகள் : 131
தாவரங்கள் சுவாசிக்கும் முறையை வீடியோவாக பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
ஸ்டோமாட்டா(Stomata) எனப்படும் இலைகளில் உள்ள நுண்துளைகள் மூலமாக தாவரங்கள் சுவாசிக்கின்றன.
தாவரங்கள் சுவாசிப்பதை இதுவரை யாரும் நேரடியாக பார்த்தது இல்லை. அப்படி இருக்கையில் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த அரிதான இயற்கை செயல்முறையை வீடியோவாக பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.
ஸ்டோமாட்டா இன் சைட் என்ற புதிய கருவியை உருவாக்கி அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
ஸ்டோமாட்டா இன் சைட் என்ற இந்த அதிநவீன கருவி Confocal microscope, machine learning ஆகிய மென்பொருளின் உதவியுடன் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டோமாட்டா இன் சைட் கருவி தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சும் போதும், Transpiration மூலம் நீரை வெளியேற்றும் போதும் இலைகளில் உள்ள நுண்துளைகள் எவ்வாறு திறந்து மூடுகிறது என்பதை துல்லியமாக படம்பிடித்துள்ளது.
விஞ்ஞானிகளின் 5 ஆண்டுகள் கடுமையான உழைப்பால் இந்த கண்டுபிடிப்பு உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan