விண்வெளியில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்தார் சுனிதா வில்லியம்ஸ்
21 தை 2026 புதன் 09:46 | பார்வைகள் : 116
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.
அதாவது கடந்தாண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதியுடன் சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றதாக நாசா அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், மனித விண்வெளி பயணத்தில் சுனிதா வில்லியம்ஸ் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறார், இவரது தலைமையின் மூலம் ஆய்வின் எதிர்காலத்தை வடிவமைத்து பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் வணிகப் பயணங்களுக்கு வழிவகுத்துள்ளார்.
இவரது சாதனைகள் அடுத்த தலைமுறையினருக்கான சாத்தியக்கூறுகளை விரிவுபடுத்தும், உங்கள் ஓய்வுக்கு வாழ்த்துக்கள், உங்கள் சேவைக்கு நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு நாசாவில் இணைந்த சுனிதா வில்லியம்ஸ், மூன்று முறை விண்வெளிக்கு சென்று 608 நாட்கள் அங்கேயே தங்கியிருந்துள்ளார், விண்வெளியில் அதிக நாட்கள் இருந்தவர்களின் பட்டியலில் சுனிதா 2ம் இடத்தில் இருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக 62 மணிநேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடைப்பயணங்களை மேற்கொண்டுள்ளார், எந்தவொரு பெண் ஆராய்ச்சியாளரும் இதனை செய்தது இல்லை,
இதுமட்டுமின்றி விண்வெளியில் மாராத்தான் ஓட்டம் மேற்கொண்ட முதல் நபர் என்ற பெருமையும் சுனிதாவுக்கே உண்டு.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan