வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
21 தை 2026 புதன் 09:14 | பார்வைகள் : 1280
வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக zones à faibles émissions திட்டம் கைவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறைந்த உமிழ்வு மண்டலம் என தெரிவிக்கப்படும் "zones à faibles émissions" பகுதிகளின் எதிர்காலம் தொடர்பில் நேற்று ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை செனட் சபையினருக்கும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அதில் zones à faibles émissions பகுதிகள் அனைத்தையும் நீக்க செனட் மேற்சபையினர் சம்மதித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இது முதலில் பாராளுமன்றத்திலும் பின்னர் செனட் சபையிலும், மீண்டும் பாராளுமன்றத்திலும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதன் முன்னரே தீர்மானமாக நிறைவேற்றப்படும்.
தொழிற்துறையினரின் நன்மைகள் கருதி இந்த zones à faibles émissions மீளாய்வுக்கு கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முடிவுகள் குறித்து தீர்க்கமாக கணிக்க முடியாத நிலை உள்ள நிலையில், "பிரான்ஸ் மெல்ல மெல்ல அமெரிக்கா போன்று வர்த்தகர்களின் கைகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது" எனும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan