காங்., நெருக்கடியை சரிக்கட்ட அசாம் தேர்தல் செலவை ஏற்கிறதா தி.மு.க.?
21 தை 2026 புதன் 11:23 | பார்வைகள் : 154
தி.மு.க., கூட்டணியில் கடந்த 2004 முதல் உள்ள காங்கிரஸ், வரும் தேர்தலில் 41 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்டு ஆளும் தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இக்கோரிக்கைகளுக்கு தி.மு.க., உடன்படாவிட்டால் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என்று, காங்கிரசில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
த.வெ.க., தலைவர் விஜய் மீதான ராகுலின் மென்மையான போக்கும், தி.மு.க.,வுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17ல், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் ராகுல் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், 'தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீட்டை முடிப்போம்' என்று ராகுல் அல்லது காங்கிரஸ் தலைவர் கார்கே வெளிப்படையாக அறிவிப்பர் என, தி.மு.க., தலைமை எதிர்பார்த்தது.ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து, காங்கிரசை சரிக்கட்டும் முடிவுக்கு தி.மு.க., தலைமை வந்திருக்கிறது. இதற்காக, அசாம் மாநில தேர்தல் செலவை ஏற்க தி.மு.க., முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே, 2011ல் 63, 2016ல் 41 தொகுதிகளை தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் பெற்றது. ஆனால், 2021ல் வெறும் 25 தொகுதிகளை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இப்போது த.வெ.க., என்ற மாற்றுவழி காங்கிரசுக்கு இருப்பதால், 41 தொகுதிகளை பெற காங்., போராடி வருகிறது.
இந்நிலையில், விரைவில் நடக்கவிருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், கேரளா, அசாமில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ராகுல் திட்டமிடுகிறார். ஆனால், தேர்தல் செலவுக்கு போதிய அளவு பணமில்லாமல் காங்., தவிக்கிறது.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, காங்.,கை வழிக்குக் கொண்டுவர தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இதையடுத்தே, 'காங்கிரசுக்கான அசாம் மாநில தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்கிறோம். வேறு எந்த நெருக்கடியும் கூடாது' என தி.மு.க., தரப்பில் பேசி முடித்துள்ளனர். இவ்வாறு கூறினார்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan