ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு! 7 பேர் பலி -10க்கு மேற்பட்டோர் காயம்!
20 தை 2026 செவ்வாய் 17:44 | பார்வைகள் : 143
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் உள்ள ஷார்-இ-நாவ் (Shahr-e-Naw) பகுதியில் இயங்கிவரும் சீன உணவகத்தில் நேற்று திங்கட்கிழமை (19) மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் சீன நாட்டைச் சேர்ந்தவர் எனவும் ஆறு பேர் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் என அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த குண்டு வெடிப்பில் இரண்டு சீனர்கள் உட்பட சுமார் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அலுவலகங்கள், வணிக நிலையங்கள், தூதரகங்கள் அமைந்த வணிக மையமாக விளங்கும் ஷார்-இ-நாவ் பகுதியில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளை பொறுப்பேற்றதாக இச்சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரி ஒருவர் குறித்த பகுதியில் குண்டு வெடிக்கச் செய்ததாகவும் அந்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சீன முஸ்லிம், அவரது மனைவி மற்றும் ஆப்கானிஸ்தானியர் ஆகியோரால் நடத்தப்பட்டு வந்த உணவகத்திலேயே தற்கொலை குண்டுதாரி குண்டுவெடிப்பினை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan