RCB அணியில் பங்குகளை வாங்கும் பிரபல நடிகர்...?
20 தை 2026 செவ்வாய் 17:38 | பார்வைகள் : 271
RCB அணியில் பங்குகளை வாங்க நடிகர் ரன்பீர் கபூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கோப்பையை வென்றதன் மூலம், RCB அணியின் சந்தை மதிப்பு 2 பில்லியன் டொலராக உயர்ந்தது.
லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம், தற்போது RCB அணியின் உரிமையாளராக உள்ளது.
Diageo நிறுவனம் RCB அணியை விற்க முன்வந்துள்ள நிலையில், பல தொழிலதிபர்கள் அணியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர், RCB அணியின் 2% பங்குகளை சுமார் ரூ.300 கோடி முதல் ரூ.350 கோடிகளுக்கு வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கூடுதலாக 6% பங்குகளை sweat equity மூலம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரன்பீர் கபூர் ஏற்கனவே ISL கால்பந்து லீக்கில் மும்பை சிட்டி FC அணியில் 9% பங்குகளை வைத்துள்ளார்.
RCB நிர்வாகம் மற்றும் ரன்பீர் கபூர் இடையே பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், இரு தரப்பினரும் இது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan