தென் ஆப்பிரிக்காவில் பயங்கர விபத்து - 11 மாணவர்கள் பலி
20 தை 2026 செவ்வாய் 18:11 | பார்வைகள் : 136
தென் ஆப்பிரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வாகனத்தை வேகமாக வந்த லொறி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் சம்பவம் இடத்திலேயே 11 மாணவர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா - கௌடெங் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பாடசாலைக்குச் சொந்தமான வேன் ஒன்று திங்கட்கிழமை (ஜன.19) காலை, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு பாடசாலைக்கு சென்றது.
வெண்டர்பிஜில் பார்க் நெடுஞ்சாலையில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போது, எதிரே வேகமாக வந்த லொறி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பாடசாலை வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், வேனில் பயணித்த மாணவ-மாணவியர் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக பலியாகினர். பலர், பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த மாணவ-மாணவியரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு, 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்
. படுகாயமடைந்த 7 மாணவர்கள் மற்றும் வேன் சாரதி தொடர் சிகிச்சையில் உள்ள நிலையில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் உள்ளது. இந்நிலையில், பலியானோரின் குடும்பத்தினருக்கு அந்நாட்டின் அதிபர் சிறில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்
. அத்துடன், படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan