பேரவையில் என்ன நடந்தது? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்
20 தை 2026 செவ்வாய் 15:06 | பார்வைகள் : 1083
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், சட்டசபையில் பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து. 4-வது ஆண்டாக அவர் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சட்டசபையில் சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு கவர்னர் அரசியல்வாதி அல்ல. கவர்னர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம். கவர்னர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை இப்படி செய்வார்களா..?
தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். இந்த மரபு ஒருபோதும் மாற்றப்படாது. <b>சபாநாயகர் பேசும் போது பேரவையில் மற்றவர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கம்தான். தயவு செய்து உங்கள் கடமையை செய்யுங்கள் என்று மட்டும்தான் கவர்னரிடம் கூறினேன்</b>. அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது கவர்னரின் கடமை. ஜனநாயக கடமையை பின்பற்றி கவர்னருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
நாளை (ஜன.21ம் தேதி) முன்னாள் எம்.எல்.ஏக்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி 22, 23ம் தேதிகளில் பேரவைக் கூட்டம் முழுமையாக நடைபெறும், கவர்னர் உரை மீது விவாதம் நடக்கும். 24-ஆம் தேதி முதல்-அமைச்சர் அதற்கு பதிலளிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan