Paristamil Navigation Paristamil advert login

Calédonie தீவைக் கைவிடுகிறதா பிரான்ஸ்? - புதிய ஒப்பந்தம் என்ன சொல்கிறது..??!!

Calédonie தீவைக்  கைவிடுகிறதா பிரான்ஸ்? - புதிய ஒப்பந்தம் என்ன சொல்கிறது..??!!

20 தை 2026 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 483


பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட கலிடோனியா தீவின் (Nouvelle-Calédonie) நிர்வாகம் தொடர்பில் புதிய சந்திப்பு ஒன்று நேற்று ஜனவரி 19, திங்கட்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி மக்ரோன் மற்றும் Calédonie தீவின் நிர்வாகிகள் என  பலர் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே உள்ள ’Accord de Bougival’ ஒப்பந்தத்திற்கு புதிய துணை ஒப்பந்தம் ஒன்று இயற்றப்பட்டு அதில் கைச்சாத்திடப்பட்டது. பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தமானது நான்கு முக்கிய பிரிவுகளைக் கொண்டது.

அதில்,

01) Calédonie  தீவில் வசிக்கும் ’கனக்’ என மக்களின் (Kanak) வரலாற்று உரிமைகளை பாதுகாத்தலும், அவர்களின் உரிமைகளை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தலும்

02) Calédonie தீவில் வசிக்கும் அனைத்து இன மக்களையும் இணைக்கும் பொது Calédonie அடையாளம் ஒன்றை உருவாக்குதல்

03) பிரான்ஸ் அரசிடம் இருந்து அரச அதிகாரங்களை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் கைமாற்றல்,

04) அரசியல் சுயநிர்ணய உரிமை தொடர்பான எதிர்கால நடைமுறைகளை உருவாக்கி, அதற்கு வழிகாட்டியாக இருத்தல்

போன்ற நான்கு அம்சங்களைக் கொண்ட ஒப்பந்தமாக இந்த துணை ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த சந்திப்புக்கு தலைமையேற்ற ஜனாதிபதி மக்ரோன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்