லூவர் மியூஸியம் : இன்னொரு அதிர்ச்சி வெளியானது!
19 தை 2026 திங்கள் 17:35 | பார்வைகள் : 703
லூவர் அருங்காட்சியகம் இன்று ஜனவரி 19 ஆம் திகதி திங்கட்கிழமை மூடப்பட்டுள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை ஊழியர்கள் பணிக்குத் திரும்பாமல் லூவரின் முற்றத்தில் கொடிகள் பிடித்துக்கொண்டு வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு, பணியாட்கள் சிறப்பாக நடத்தப்படவேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வருட டிசம்பர் முதல் ஊழியர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தவண்ணம் உள்ளனர். இன்று இடம்பெறுவது மூன்றாவது நாள் வேலை நிறுத்தமாகும்.
இந்த மூன்றுநாட்களும் லூவர் மூடப்பட்டிருந்தது. இதனால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வருவாய் இழப்பை லூவர் எதிர்கொண்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வார வியாழக்கிழமை ஊழியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது. பிரெஞ்சு சுற்றுலாத்துறை அமைச்சரும், கலாச்சார அமைச்சரும் கலந்துகொள்ள உள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan