இலங்கையில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனுக்கு விளக்கமறியல்
19 தை 2026 திங்கள் 15:30 | பார்வைகள் : 139
காலியில் அஹங்கம - தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை தாயை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் சமீர தொடன்கொட உத்தரவிட்டுள்ளார்.
அஹங்கம - தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மகனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அஹங்கம - தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை சந்தேக நபரான மகன் மதுபோதையில் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ள நிலையில் பின்னர் தனது தாயை கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளார்.
காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கொலைசெய்யப்பட்டவர் அஹங்கம - தித்தகல்ல பகுதியை சேர்ந்த 80 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.
இதனையடுத்து சந்தேக நபரான மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan