Paristamil Navigation Paristamil advert login

Corbeil-Essonnes: கெபாப் கடை முன் கத்தியால் தாக்குதல்!! மூன்று சந்தேக நபர்கள் கைது!!

Corbeil-Essonnes: கெபாப் கடை முன் கத்தியால் தாக்குதல்!! மூன்று சந்தேக நபர்கள் கைது!!

19 தை 2026 திங்கள் 15:08 | பார்வைகள் : 635


கோர்பெயில்-எஸ்ஸோனில் உள்ள ஒரு கெபாப் கடை முன் 27 வயதுடைய துருக்கி நாட்டை சேர்ந்த ஒருவர், கடந்த சனிக்கிழமை இரவு கத்தியால் குத்தப்பட்டு கடுமையாக காயமடைந்தார். 

500 யூரோ கடன் தொடர்பான தகராறே இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். மார்புப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு குத்துக் காயங்களுடன், குறிப்பாக இடது நுரையீரலை துளைத்த நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள், 21 முதல் 33 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேகநபர்கள் Évry-Courcouronnes (Essonne) கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்பெயிலில் வசிப்பவர்கள் என்றும், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அந்த கத்தியை, கோர்பெயில்-எஸ்ஸோனில் உள்ள கிரெதே (boulevard Crêté) சாலைக்கு அருகே ஒரு மரத்தின் அடியில் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கத்தி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரும் தற்போது “கொலை முயற்சி” குற்றச்சாட்டின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் தொடர்ச்சியான விசாரனைகள் நடைபெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்