Navigo சந்தாதாரர்களுக்கு இழப்பீடு!!
18 தை 2026 ஞாயிறு 21:34 | பார்வைகள் : 751
2025ஆம் ஆண்டில் RER தொடருந்துகளின் நேர மேலாண்மை மேம்பட்டுள்ளதாக Île-de-France Mobilités வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொடருந்துகளின் தாமதம் காரணமாக இழப்பீடு பெறும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது, கடந்த ஆண்டுகளை விட இது பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.
IDFM விதிகளின்படி, 80 வீதத்திற்கும் குறைவாக மூன்று மாதங்கள் சென்ற வழித்தடங்கள் மட்டும் Navigo சந்தாதாரர்களுக்கு இழப்பீடு வழங்குகிறது. 2025ஆம் ஆண்டில் RER B (Aulnay-sous-Bois -Mitry-Claye ) மற்றும் RER C (Dourdan–La Norville) ஆகிய இரண்டு வழித்தடங்கள் மட்டுமே இந்த அளவுகோலை எட்டவில்லை.
மற்ற வழித்தடங்களில் RER A தொடருந்து சேவை 94.5 சதவீதத்துடன் நேர மேலாண்மையில் முன்னணியில் உள்ளது. RER B, RER C ஆகியவை சிறிய முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் RER D மற்றும் RER E வழித்தடங்களில் நேர மேலாண்மை குறைந்த போதும், அவை இழப்பீடு பெறும் வரம்புக்குள் வராததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பயணிகள் அமைப்புகள், “தொடருந்துகளின் எண்ணிக்கைகள் மேம்பாடு அடைந்தாலும், பயணிகளின் தினசரி அனுபவம் மாறவில்லை” என விமர்சித்துள்ளன. 80 சதவீதம் என்ற கடுமையான வரம்பு பல வழித்தடங்களில் தொடரும் தாமதங்களை மறைக்கிறது என்றும், இழப்பீட்டு விதிகளில் மாற்றம் தேவை என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan