தர்மம் தான் நம் அனைவரையும் இயக்கும் சக்தி; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
19 தை 2026 திங்கள் 13:46 | பார்வைகள் : 141
தர்மம் தான் நம் அனைவரையும் இயக்கும் சக்தி என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறி உள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;
இந்த உலகில் தர்மம்தான் நம் அனைவரையும் இயக்கும் சக்தி ஆகும். தர்மத்தினால் இயக்கப்படும் ஒரு வாகனத்தில் நாம் அமர்ந்தால், நாம் ஒருபோதும் விபத்தை சந்திக்க மாட்டோம்.
இந்த முழு பிரபஞ்சத்தையும் தர்மமே இயக்குகிறது. ஒரு அரசாங்கமானது மதசார்பற்றதாக இயங்க முடியும். ஆனால் உயிருள்ள அல்லது உயிரற்ற எந்த உயிரினமும் தர்மம் இல்லாமல் இருக்கவே முடியாது. நமது பாரதம் தர்மத்தால் வழிநடத்தப்படும் வரை அது பொதுவானதாகவே இருக்கும். ஏனெனில் இந்த உலகில் ஆன்மிக அறிவுக்கு தட்டுப்பாடு உள்ளது.
நம் துறவிகளின் கண்ணியத்தையும், அவர்களின் மரியாதையையும் பராமரிப்பது நமது கடமை ஆகும். அதனால் தான் பிரதமர் கூட, வேண்டாம் என்று சொல்வதற்கு தயங்குகிறார். நாம் கடவுளுக்காக வேலை செய்து வருகிறோம் என்பதை எப்போதும் நம் மனதில் நிலை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் கடவுள் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan