Paristamil Navigation Paristamil advert login

மிட்செல் 137, பிலிப்ஸ் 106 - இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

 மிட்செல் 137, பிலிப்ஸ் 106 - இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

18 தை 2026 ஞாயிறு 15:28 | பார்வைகள் : 123


இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மிட்செல், பிலிப்ஸ் சதம் விளாச நியூசிலாந்து 337 ஓட்டங்கள் குவித்தது.

இந்தூரில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. 

முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணியில் நிக்கோல்ஸ், கான்வே சொதப்ப வில் யங் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் டேர்ல் மிட்செல், க்ளென் பிலிப்ஸ் நங்கூர பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த கூட்டணியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் போராட, நியூசிலாந்தின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 

டேர்ல் மிட்செல் தனது 9வது சதத்தினை பதிவு செய்ய, பிலிப்ஸ் அதிரடியாக சதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 277 ஆக உயர, இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. 
க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 88 பந்துகளில் 106 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 9 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) 137 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 15 பவுண்டரிகள்) குவித்து அவுட் ஆனார்.

அணித்தலைவர் மைக்கேல் பிரேஸ்வெல் 18 பந்துகளில் 28 ஓட்டங்கள் விளாச, நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணியின் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் குல்தீப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.    

வர்த்தக‌ விளம்பரங்கள்