BSR: ஓட்டுநர் உரிமம் இல்லாத இளம் ஓட்டுநர்களால் உயரும் சாலை விபத்துக்கள்??
18 தை 2026 ஞாயிறு 13:49 | பார்வைகள் : 1606
கடந்த பத்து ஆண்டுகளில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓடும் கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 14 வயதிலிருந்தே சாலை பாதுகாப்பு சான்றிதழ் (BSR-brevet de Sécurité routière) பெற்றால் இக்கார்களை ஓட்ட அனுமதி வழங்கப்படுவதால், இளம் ஓட்டுநர்கள் பொதுச் சாலையில் அதிகம் காணப்படுகின்றனர்.
2024 ஆம் ஆண்டில் மட்டும், இவ்வகை வாகனங்கள் தொடர்பான விபத்துகளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் சாதாரண கார்கள் விட அதிகமாக இருப்பதால், இளம் ஓட்டுநர்கள் சாலை பாதுகாப்புக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுகிறது. இளம் ஓட்டுநர்களுக்கு ஆபத்தை மதிப்பிடும் திறனும், விதிகளை முழுமையாகப் பின்பற்றும் மனப்பக்குவமும் இன்னும் முழுமையாக வளரவில்லை என உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளை வளர்ச்சி 22–23 வயதில் தான் நிறைவடைவதால், 14–16 வயதில் உள்ளவர்கள் விதிகளின் எல்லையைத் தாண்ட முயற்சிக்கிறார்கள். இதனுடன் அனுபவக் குறைவும், குறைந்த பயிற்சியும் சேர்ந்து, விபத்துகளுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், ஸ்கூட்டரை (scooter) விட ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓடும் கார்கள் மற்றவர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில், இவ்வகை கார்கள் சில பெற்றோருக்கு ஸ்கூட்டரை விட பாதுகாப்பானதாகத் தோன்றுகின்றன. பொதுப் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் வேலை அல்லது பயிற்சிக்குச் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கலாம். எனினும், இளம் வயதில் இவ்வளவு பொறுப்பு வழங்குவது சரியா என்ற கேள்வி தொடர்கிறது. இறுதியில், 18 வயது வரை குழந்தையின் ஓட்டுநர் நடத்தை மற்றும் பயன்பாட்டின் நோக்கம் பெற்றோரின் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan