Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மனைவியை தீ வைத்து எரித்த கணவருக்கு மரண தண்டனை

இலங்கையில் மனைவியை தீ வைத்து எரித்த கணவருக்கு மரண தண்டனை

18 தை 2026 ஞாயிறு 12:43 | பார்வைகள் : 220


தனது மனைவியின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவருக்கு மரண  தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி   சிந்தக ஸ்ரீநாத் குணசேகர, கடந்த 16 ஆம் திகதி அன்று வழங்கினார்.

மொனராகலை, ஹுலந்தாவ தெற்கு, கெமுனுபுரவைச் சேர்ந்த யடபாலகே நீல் ஸ்டான்லி ஜெயரத்னவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு தனது மனைவி கே.எம். சுஜாதா மீது குற்றம் சாட்டப்பட்டவர்  பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். மனைவி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கொலை குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட சந்தேக நபருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்தார்.

சட்டத்தரணி சோமரத்ன ஹேரத் பிரதிவாதிக்காக ஆஜரானார், அதே நேரத்தில் அரசு வழக்கறிஞர் துமிந்த டி அல்விஸ் வழக்குத் தொடர தலைமை தாங்கினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்