அலி காமெனி ஆட்சியின் முடிவு - அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்
18 தை 2026 ஞாயிறு 08:28 | பார்வைகள் : 268
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் 37 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானில் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான வாரக்கணக்கான போராட்டங்களால் உலுக்கப்பட்ட நிலையில், அந்த நாட்டில் புதிய தலைமைத்துவத்தைத் தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு 800-க்கும் மேற்பட்டவர்களைத் தூக்கிலிடாமல் இருந்ததுதான் அவர்கள் எடுத்த மிகச் சிறந்த முடிவு என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஈரானின் தலைமை நாட்டை ஆள்வதற்கு ஒடுக்குமுறையையும் வன்முறையையும் நம்பியிருக்கிறது என்றும் ட்ரம்ப் வாதிட்டுள்ளார். நாட்டை முழுமையாக அழித்ததற்கும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறையைப் பயன்படுத்தியதற்கும் அவர் அலி காமெனியை குற்றம் சாட்டினார்.
நாடு செயல்படுவதைத் தொடரச் செய்வதற்காக, அந்தச் செயல்பாடு மிகக் குறைந்த மட்டத்தில் இருந்தாலும், அந்தத் தலைமை, நான் அமெரிக்காவை நிர்வகிப்பது போல, தனது நாட்டைச் சரியாக நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்; அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதில் ஈடுபடக் கூடாது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைத்துவம் என்பது மரியாதையைப் பற்றியது, பயம் மற்றும் மரணத்தைப் பற்றியது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காமெனியை மிக மோசமான நபர் என குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானின் தலைமைத்துவத்தினால்தான் அது உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் மோசமான இடம் என்று அழைக்கப்படுகிறது என்றார்.
ஆனால், ஈரானில் வெடித்த வன்முறை சம்பவங்கள் அனைத்திற்கும் ட்ரம்பும் இஸ்ரேலும் முதன்மையான காரணம் என காமெனி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆயிரங்கள் கொல்லப்பட்டது உண்மையே என குறிப்பிட்ட காமெனி, அதன் பின்னணியில் ட்ரம்பின் கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விலைவாசி உயர்வு காரணமாக அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை அமெரிக்கா தூண்டிவிட்டு, வன்முறையாளர்களாக மாற்றியது என அலி காமெனி வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
நாட்டை போருக்கு இட்டுச் செல்லும் நோக்கம் எங்களுக்கு இல்லை, ஆனால் உள்நாட்டு குற்றவாளிகளை நாங்கள் விட்டுவைக்க மாட்டோம் என்றார். இந்த விவகாரத்தில் சர்வதேசக் குற்றவாளிகளும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan