Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்ஸ் பகுதியில் வாடகைக் கார் சேவை: IDFM அறிவிப்பு!!

இல்-து-பிரான்ஸ் பகுதியில் வாடகைக் கார் சேவை: IDFM அறிவிப்பு!!

18 தை 2026 ஞாயிறு 08:13 | பார்வைகள் : 768


இல்-து-பிரான்ஸ் பகுதி 2027 ஆம் ஆண்டில் பிராந்திய அளவிலான auto-partage சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இல்-து-பிரான்ஸ் மொபிலிட்டேஸ் (IDFM) மேற்பார்வையில் செயல்படும் இந்த சேவை, குறுகிய மற்றும் நடுத்தர கால வாடகைக்காக “வட்டச் சுழற்சி” முறையில் இருக்கும்; அதாவது வாகனத்தை எடுத்த இடத்திலேயே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். 

பயன்பாட்டு வாகனங்கள் முதல் சிறிய நகரக் கார்கள் வரை பல வகை வாகனங்கள் இதில் இடம்பெறும். 2026 இறுதிக்குள் ரெண்டர் அறிவிக்கப்படும் 2027ல் முதல் 500 கார்கள் சேவையில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பரிஸியர்கள் மற்றும் பிராந்திய மக்கள் தனிப்பட்ட கார் வாங்க வேண்டிய அவசியத்தை குறைப்பதாகும். 

எதிர்காலத்தில் சுமார் 5,000 வாகனங்கள் கொண்ட ஒரு பெரிய வாகனப் படையை உருவாக்க IDFM திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குடும்பங்களுக்கு இரண்டு அல்லது மூன்று கார்கள் வைத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும் என பிராந்தியத் தலைவர் வலேரி பெக்ரெஸ் தெரிவித்துள்ளார். 

கடந்த காலத்தில் 'Autolib’ சேவை தோல்வியடைந்த அனுபவம் இருந்தாலும், புதிய திட்டம் நீடித்த மற்றும் பயனுள்ள போக்குவரத்து தீர்வாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்