பரிஸ் : நள்ளிரவில் உடைந்து உள்ளிறங்கிய கட்டிடம்! - 20 பேர் காயம்!!
18 தை 2026 ஞாயிறு 06:54 | பார்வைகள் : 2470
பரிசில் உள்ள கட்டிடம் ஒன்று நள்ளிரவு திடீரென உடைந்து நொருங்கியுள்ளது. கட்டிடத்துக்குள் சிக்கியிருந்த 50 பேரில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
11 ஆம் வட்டாரத்தின் Rue Amelot வீதியில் உள்ள ஐந்து அடுக்கு கட்டிடம் ஒன்றிலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 12.20 மணி அளவில் பாரிய சத்தத்துடன் வெடித்து உள் இறங்கியுள்ளது. ஐந்து அடுக்கு கட்டிடம் நான்கு அடுக்காக குறைந்து உள்ளிறங்கியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக 125 தீயணைப்பு படையினர் அனுப்பப்பட்டு கட்டிடத்துக்குள் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். சம்பவத்தின் போது கட்டிடத்துக்குள் 50 பேர் வரை இருந்ததாகவும், அவர்களில் 20 பேர் காயடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan