Paristamil Navigation Paristamil advert login

தன்னிச்சையாக தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதாக குற்றச்சாட்டு!

தன்னிச்சையாக தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதாக குற்றச்சாட்டு!

18 தை 2026 ஞாயிறு 11:21 | பார்வைகள் : 145


இந்தியாவில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, சில வியாபாரிகள் தன்னிச்சையாக தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதாக, மலபார் கோல்டு நிறுவன தலைவர் அஹமத் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி வரி ஆகிய மூன்று முக்கிய காரணிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

இறக்குமதி வரி நிலையாக நீடிக்கும் நிலையில், தினமும் சர்வதேச சந்தை விலை மற்றும் ரூபாயின் மதிப்பு மாற்றத்துக்கு ஏற்ப, தங்கத்தின் விலையை நிர்ணயிக்க வேண்டும்.வழக்கமாக, காலை 9.30 மணிக்கு முன், தங்கம் விலை நம்பகமாகவும், வெளிப்பைடைத்தன்மையுடனும், வர்த்தக சங்கங்களால் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

சந்தையில் அபூர்வமாக ஏற்படும் பெரிய மாறுதலின் போது மட்டுமே, விலையில் மாற்றம் செய்யப்படும். ஆனால், சில வியாபாரிகள், நடைமுறைக்கு மாறாக, நுகர்வோருக்கு தெளிவான விளக்கம் தராமல், தன்னிச்சையாக தங்கத்தின் விலையை உயர்த்துகின்றனர்.இதுபோன்ற நடவடிக்கைகள், தங்க வர்த்தகத்தின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கும்.

வரி விதிப்பு மாறாதது என்ற நிலையில், சர்வதேச நடைமுறையின்படி, நாடு முழுவதும் தங்கம் விலை ஒரே அளவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி, 'ஒரே இந்தியா, ஒரே விலை' என்ற முயற்சியை துவங்கி உள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்