Paristamil Navigation Paristamil advert login

தமிழகம் வரும் பியூஷ் கோயல்; பாஜ தொகுதிகள் எண்ணிக்கை முடிவாக வாய்ப்பு

தமிழகம் வரும் பியூஷ் கோயல்; பாஜ தொகுதிகள் எண்ணிக்கை முடிவாக வாய்ப்பு

18 தை 2026 ஞாயிறு 06:57 | பார்வைகள் : 156


அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, கூட்டணியை விரிவுபடுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த, மத்திய அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதிகள் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இரு கட்சிகள் இடையே தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டில்லி பாஜ டிச.15ம் தேதி நியமனம் செய்து இருக்கிறது. அதன் பின்னர், சென்னையில் பாஜ தலைவர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், மீண்டும் பியூஷ் கோயல் இன்று (ஜன.18) சென்னை வருகிறார். 2 நாள் பயணமாக சென்னை வரும் அவர், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மேலும், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, கூட்டணியை விரிவுபடுத்துவது தொடர்பாக பேச உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, அதிமுக, பாஜ, பாமக தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. ஜன. 23ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில், இன்றைய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி இருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்