Paristamil Navigation Paristamil advert login

விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய டேவிட் வார்னர் - டி20-யில் 10வது அதிரடி சதம்

 விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய டேவிட் வார்னர் - டி20-யில் 10வது அதிரடி சதம்

17 தை 2026 சனி 10:10 | பார்வைகள் : 119

டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி டேவிட் வார்னர் முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபலமான பிக் பாஷ் டி20 லீக் சிட்னி தண்டர் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் இன்று மோதின.

முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்து இலக்கை நிர்ணயித்தது.

சிறப்பாக விளையாடிய சிட்னி தண்டர் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 65 பந்துகளில் 110 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக சதம் விளாசிய விராட் கோலியின் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.

விராட் கோலி மொத்தம் 9 டி20 சதங்கள் விளாசி உள்ள நிலையில் டேவிட் வார்னர் இதன் மூலம் தனது 10 வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இந்த தரவரிசையில் கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்திலும், பாபர் அசாம் 11 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

190 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஸ்டீவ் ஸ்மித்  அதிரடியான 42 பந்தில் 100 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் சிட்னி சிக்சர்ஸ் 17.2 ஓவர்கள் முடிவிலேயே 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்