Paristamil Navigation Paristamil advert login

ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

 ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

17 தை 2026 சனி 10:02 | பார்வைகள் : 215


ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் சிவில் விமான நிறுவனங்களை 16.01.2026 வலியுறுத்தியுள்ளது.

ஈரானில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அமெரிக்காவின் தலையீடுகளால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தல் ஈரானிய வான் பாதுகாப்பை அதிக எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளது.

இது சிவில் விமானங்களுக்கு தவறான அடையாளத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான ஒழுங்குமுறை ஆணைக்குழு விளக்கியுள்ளது.

இதேவேளை தெஹ்ரான் பரவலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதை நிறுத்தாவிட்டால் அமெரிக்கா தாக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் மைக் வோல்ட்ஸ் ஈரான் தொடர்பில் அனைத்து விருப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்