ஈரானில் பிரெஞ்சுப் பெண் காயம்!!
16 தை 2026 வெள்ளி 19:08 | பார்வைகள் : 446
ஈரானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பிரான்சு நாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இத்தகவலை பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஜனவரி 16, இன்று வெள்ளிக்கிழமை காலை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அது சில நிமிடங்களிலேயே வன்முறை மோதலாக வெடித்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரெஞ்சு பெண் ஒருவர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Jean-Noël Barrot தெரிவித்தார்.
"குறித்த பெண் தற்போது மருத்துவவ சிகிச்சையின்கீழ் உள்ளார். மேலதிக தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலதிக விபரங்களை தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தை தொடர்புகொண்டு கேட்டறிய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan