Paristamil Navigation Paristamil advert login

ய்வெலின் உயர்நிலைப் பாடசாலையில் காற்றுத் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் கைது!!

ய்வெலின் உயர்நிலைப் பாடசாலையில் காற்றுத் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் கைது!!

16 தை 2026 வெள்ளி 14:23 | பார்வைகள் : 366


ய்வெலின் (Yvelines) மாகாணத்தில் உள்ள Saint-Germain-en-Laye நகரின் விவசாயம் மற்றும் தோட்டக்கலை உயர்நிலைப் பாடசாலையில், ஜனவரி 15 அன்று மாலை 4 மணியளவில் மூன்று நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்து காற்றுத்துப்பாக்கியால் (carabine à plomb) இரண்டு முறை மாணவர்களை நோக்கி சுட்டுள்ளனர். 

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாடசாலை நிர்வாகம் உடனடியாக மாணவர்களை மூடுபாதுகாப்பு (confinement) நடவடிக்கையை மேற்கொண்டது. காவல்துறை வந்த நேரத்தில் குற்றவாளிகள் வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தாலும், அருகிலேயே Chambourcy நகரை சேர்ந்த அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் சுமார் இருபது வயதுடைய மாணவர்கள் என்றும், ரக்பி விளையாடும் நண்பர்களை நோக்கி “ஒரு ஜோக்” செய்ய நினைத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், சுட்டபோது குறிவைக்கப்பட்டவர்கள் நண்பர்கள் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆயுதத்துடன் வன்முறை செய்ததாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேயர் இதை “மாணவர்களின் தவறான விளையாட்டு” என கூறியதுடன், காவல்துறையின் சிறந்த ஒருங்கிணைப்பையும் பாராட்டி உள்ளார். பாடசாலையின் திறந்த அமைப்பு காரணமாக பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிராந்திய நிர்வாகமும் மற்றும் பாடசாலை நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்