U19 உலகக்கோப்பை - புதிய உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி
16 தை 2026 வெள்ளி 12:26 | பார்வைகள் : 115
U19 உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
U19 உலகக்கோப்பை, ஜனவரி 15 ஆம் திகதி தொடங்கி, பிப்ரவரி 6 ஆம் திகதி வரை ஜிம்பாப்வே நடைபெற்று வருகிறது.
இதில் 16 அணிகள் பங்கு பெறும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதியது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய அமெரிக்க அணி, 35.2 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
மழை குறுக்கிட்டதால், DLS முறைப்படி, 37 ஓவர்களில் 96 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி 17.2 ஓவர்களில் 99 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
14 வயது 294 நாட்களான வைபவ் சூர்யவன்ஷி, நேற்றைய போட்டியில் விளையாடியதன் மூலம், U19 உலகக்கோப்பையில் விளையாடிய உலகின் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக 2010 U19 உலகக்கோப்பையில், கனடாவின் நிதிஷ் குமார், 15 வயது 245 நாட்களில் விளையாடியதே சாதனையாக இருந்தது.
மேலும் U19 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 978 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
நேற்றைய போட்டியில் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்த வைபவ் சூர்யவன்ஷி தற்போது 975 ஓட்டங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
நாளை நடைபெற்ற உள்ள வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், 4 ஓட்டங்கள் எடுப்பதன் மூலம் கோலியின் நீண்ட கால சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடிப்பார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan