Paristamil Navigation Paristamil advert login

ஆஸ்திரேலியாவில் கடும் புயலுடன் கூடிய பெருமழை - மீட்பு பணிகள் தீவிரம்

ஆஸ்திரேலியாவில் கடும் புயலுடன் கூடிய பெருமழை  - மீட்பு பணிகள் தீவிரம்

16 தை 2026 வெள்ளி 11:21 | பார்வைகள் : 1083


அவுஸ்திரேலியாவின் விக்டோரியா (Victoria) மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.

இதனால் கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் சங்கமித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் சில மணித்தியாலங்களுக்குள் சுமார் 169 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தத் திடீர் மழையினாலேயே குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அப்பகுதியில் ஏற்பட்டுள்ள அவசர நிலையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு காவல்துறையினரும் அவசர சேவைப் பிரிவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன்.

வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026