கிரீன்லாந்தில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரெஞ்சு இராணுவம்!!
16 தை 2026 வெள்ளி 09:18 | பார்வைகள் : 929
கிரீன்லாந்தின் வெள்ளை பனி மலைகளில் பிரெஞ்சு இராணுவத்தினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய பாதுகாப்பின் ஒரு அம்சமாகவும், அமெரிக்காவின் பதட்டமான சூழ்நிலையை எதிர்கொள்ளவுமான நடவடிக்கையாக இருந்து இருக்கிறது.
கிரீன்லாந்து தலைநகரான நூக்கில் (Nuuk) நேற்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. அதில் பனிமலையில் உருமறைப்பாகும் வகையில் உள்ள வெள்ளைச் சீருடையும், கறுப்பு நிற தொப்பியும் அணிந்துகொண்டு தொடருந்தில் வந்திறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
வடக்கு அட்லாண்டிக்கிற்கும் ஆர்டிக் பெருங்கடலுக்கும் இடையே உள்ள ஒரு தீவை கைப்பற்றும் முனைப்பில் அமெரிக்கா உள்ளது. இதனால் ஐரோப்பிய தலையீடு அங்கு அவசியமாகிறது. அதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடுகள் தங்களது இராணுவத்தை அங்கு நிலைகொள்ளச் செய்கிறது.
அதன் தொடர்ச்சியாகவே பதினைந்து வரையான இராணுவத்தினர் கிரீன்லாந்தில் தரையிறங்கியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan