மருத்துவர்களின் வேலைநிறுத்தம் : நோய்விடுப்பு கட்டுப்பாட்டு இலக்குகளை கைவிட்ட அரசு!!
16 தை 2026 வெள்ளி 08:12 | பார்வைகள் : 799
தனியார் மருத்துவர்களின் பத்து நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, அரசு அவர்களுடன் மீண்டும் உரையாடலை தொடங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் (Stéphanie Rist), நோய்விடுப்பு வழங்குதலைக் கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவர்களுக்கு இலக்குகள் நிர்ணயிக்கும் திட்டத்தை கைவிடுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இது மருத்துவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்த முடிவு என அவர் விளக்கியுள்ளார். இந்த நடவடிக்கையை நீக்கும் திருத்தம் (amendement de suppression), தேசிய சட்டமன்றத்தில் மசோதா விவாதத்தின் போது முன்வைக்கப்படும். மேலும், “இலக்கு நிர்ணயம்” (MSO) நடைமுறையை ஆய்வு செய்யவும், அதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வழிகளை கண்டறியவும் ஒரு ஆதரவு குழு அமைக்கப்படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், மருத்துவ சங்கங்களுடன் ஒப்பந்தம் இல்லாதபோது மருத்துவக் கட்டணங்களை ஒருதலைப்பட்சமாக குறைக்க அனுமதித்த சட்டப்பிரிவுகள் நீக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும், மருத்துவர்கள் தங்கள் பணியை தொடங்க உதவும் தகவல் மற்றும் ஆலோசனை மையம் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan