17 வயது பாடசாலைச் சிறுமி தற்கொலை! - பல்வேறு விசாரணைகள் ஆரம்பம்!!
16 தை 2026 வெள்ளி 07:00 | பார்வைகள் : 616
பாடசாலையில் இடம்பெற்ற துன்புறுத்தல் காரணமாக Mitry-Mory (Seine-et-Marne) நகரில் வசிக்கும் 17 வயதுடைய உயர்கல்வி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 13, செவாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. RER தொடருந்து நிலையமான Villeparisis–Mitry-le-Neuf இன் தண்டவாளத்தில் குறித்த சிறுமி படுத்திருந்ததாகவும், தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பலர் அவசர இலக்கத்துக்கு அழைத்து காவல்துறையினரை அழைத்ததாகவும், ஆனால் அதற்குள்ளாக தொடருந்து அவரை மோதி தள்ளியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் உடல் பலமணிநேரங்களின் பின்னரே மீட்கக்கூடியதாக இருந்தது. தொடருந்து சாரதிக்கு மதுபோதை பரிசோதனை இடம்பெற்றது. சம்பாவிதத்தை தடுக்க கூடிய அவகாசம் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி தற்கொலை செய்வதற்கு முன்னர் பலதடவைகள் அவரது பெற்றோர்களிடம் பாடசாலையில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் தொடர்பில் தெரிவித்திருந்ததாகவும், பல பிரிவுகளில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan