Paristamil Navigation Paristamil advert login

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசை 2026 - இலங்கை பெற்றுள்ள இடம்

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசை 2026 - இலங்கை பெற்றுள்ள இடம்

15 தை 2026 வியாழன் 15:45 | பார்வைகள் : 492


2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை 93 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதுடன், சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன்விசா இன்றி 192 நாடுகளுக்குச் செல்ல முடியும்.

ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், டென்மார்க் மற்றும் லக்சம்பர்க் முறையே 188 மற்றும் 186 நாடுகளுக்குப் பிரவேச அனுமதியைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளன.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் 24 நாடுகளுக்கு மட்டுமே பிரவேச அனுமதியைக் கொண்டுள்ளதால் 101 ஆவது இடத்தில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண்ணின் படி, கடந்த வருடம் இலங்கை 44 நாடுகளுக்குப் பிரவேச அனுமதியைப் பெற்று 96 ஆவது இடத்தில் இருந்ததுடன், இவ்வருடம் அந்நாடுகளின் எண்ணிக்கை 39 ஆகக் குறைந்துள்ளது.

இந்தச் சுட்டெண்ணில் இலங்கைக்குக் கீழே 11 நாடுகள் மட்டுமே உள்ளன.

இலங்கைக் கடவுச்சீட்டு இப்போதும் ஏனைய சார்க் (SAARC) நாடுகளான நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.

ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண், உலகின் அனைத்து கடவுச்சீட்டுகளையும் அதன் உரிமையாளர்கள் முன்விசா இன்றி பயணிக்கக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்