பாவமோ.. புண்ணியமோ.. அவனவன் விதைச்சது...தனுஷின் அதிரடி பொங்கல் விருந்து!
15 தை 2026 வியாழன் 14:55 | பார்வைகள் : 194
தனுஷ் சமீபகாலமாகவே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இட்லி கடை படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேநேரம், நல்ல ஒரு ஃபீல் குட் படம் என்கிற விமர்சனம் வந்தது.
அந்த படத்திற்கு பின் ஹிந்தி பட இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் Tere Ishk Mein என்கிற படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. தமிழில் இந்த படம் வசூலை பெறவில்லை என்றாலும் ஹிந்தியில் நல்ல வசூலை பெற்றது.
இந்த படத்திற்கு பின் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வந்தார். இது தனுஷின் 54வது படமாக உருவாகி வந்தது. மேலும், பிரேமலு புகழ் மமிதா பைஜூ ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு பேர் வாங்கி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று பொங்கல் என்பதால் இந்த படத்தின் அறிவிப்போடு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த படத்திற்கு கர என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் என்பது இனிமேல் இயக்குனர் சொன்னால்தான் தெரியவரும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan