டிரம்ப் மற்றும் நெதன்யாவுக்கு எதிராகவும் ஈரான் அரசுக்கு ஆதரவாகவும் பேரணி
15 தை 2026 வியாழன் 13:31 | பார்வைகள் : 352
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, ஈரான் அரசுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர்.
அப்போது, டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் உருவப் படம் இடம்பெற்ற சவப்பெட்டியை சாலையில் இழுத்துச் சென்று, இருவருக்கும் எதிராக முழக்கமிட்டனர்.
ஈரான் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாட்டின் தேசியக் கொடியையும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுத் தலைவர்களுக்கு எதிரான போராட்டத்தால் லடாக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், மக்களில் பொருளாதாரச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்றாட செலவே அதிகரித்து காணப்படுவதால், ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை அந்நாட்டு அரசு களமிறக்கியுள்ளது.
இதனிடையே, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan