Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல் - பொலிஸ் உள்பட 6 பேர் பலி

 பாகிஸ்தானில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல் -  பொலிஸ் உள்பட 6 பேர் பலி

15 தை 2026 வியாழன் 11:33 | பார்வைகள் : 274


பாகிஸ்தானில் கோமல் பஜார் என்ற இடத்துக்கு அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேருக்கு படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகயில் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதனையடுத்து, அந்தப் பகுதி ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மோஷின் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் TTP தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

இதனால் சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்