Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தால் நிலைமை மிகவும் மோசம் ! சசிதரூ

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தால் நிலைமை மிகவும் மோசம் ! சசிதரூ

14 தை 2026 புதன் 18:16 | பார்வைகள் : 159


ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தால் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய வெளியுறவு இணை அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் கூறி உள்ளார்.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. 2 வாரங்களாக நீடிக்கும் இந்த போராட்டத்தை அந்நாட்டு அரசு முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.

போராட்டக்காரர்கள், போலீசார் இடையேயான மோதலில் வன்முறை வெடிக்க, இதுவரை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். ஈரானில் அமைதியற்ற சூழல் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக தாய்நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக நாடு திரும்புங்கள், மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளது.


இந் நிலையில், ஈரான் பிரச்னை தீவிரமானது, அங்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்று முன்னாள் மத்திய வெளியுறவு இணை அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;


ஈரான் பிரச்னை தீவிரமாக தெரிகிறது. அங்கு தற்போதுள்ள நிலைமை என்ன என்பது குறித்து எங்களுக்கு அதிக தகவல்கள் கிடைக்க பெறவில்லை. எங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஊடகங்களில் இருந்து நாங்கள் பார்த்தது தான்.

ஈரானில் நிலைமை மோசமாக உள்ளது என்பது எனது புரிதல் ஆகும். அங்கு கிட்டத்தட்ட 3000 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அடுத்த சில நாட்களில் அங்கு நிலைமை மேலும் தீவிரமாகும் என்று தெரிகிறது. அங்குள்ள அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்றால், கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.

இவ்வாறு சசிதரூர் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்