கிரீன்லாந்தின் இறையாண்மை மீறப்பட்டால் முன்னெப்போதும் இல்லாத விளைவுகளை ஏற்படுத்தும்: மக்ரோன் எச்சரிக்கை!!
14 தை 2026 புதன் 15:24 | பார்வைகள் : 1239
எமானுவேல் மக்ரோன், கிரீன்லாந்தின் இறையாண்மை மீறப்பட்டால் முன்னெப்போதும் இல்லாத “தொடர் விளைவுகள்” ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். ஐரோப்பிய மற்றும் கூட்டணி நாடான டென்மார்க்கின் இறையாண்மை பாதிக்கப்பட்டால், பிரான்ஸ் அதை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொள்ளும் என்றும், டென்மார்க்குடன் முழுமையான ஒற்றுமையுடன் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை, டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ளலாம் என்ற மிரட்டல்களின் பின்னணியில் வெளியாகியுள்ளது. டென்மார்க் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே நடைபெறவுள்ள உயர்பதற்ற சந்திப்புக்கு முன்பாகவே இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் பிரதமரும், டிரம்பின் நோக்கங்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், பிற நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாப்பதே நமது சொந்த பாதுகாப்புக்கான அடிப்படை என்றும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் (Ursula von der Leyen), “கிரீன்லாந்தின் மக்கள் நம்மீது நம்பிக்கை வைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது என்றும், அவர்களின் விருப்பங்களும் நலன்களும் செயல்களால் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், கிரீன்லாந்து பிரதமர் Jens-Frederik Nielsen இப்போது சுதந்திரம் பற்றி பேச வேண்டிய நேரமல்ல என்றும், இந்த கடினமான சூழலில் டென்மார்க்குடன் ஒன்றுபட்டு நிற்பது அவசியம் என்றும் கூறியுள்ளார். இதற்கு மாறாக, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து தேவை என மீண்டும் வலியுறுத்திள்ளார்.
“தங்கக் கவசம்”(Golden Dome) ஏவுகணை எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புத் திட்டத்துக்கு கிரீன்லாந்து முக்கியம் என்றும், இல்லையெனில் ரஷ்யா அல்லது சீனா அதைப் பயன்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்தால் நேட்டோ (NATO) மேலும் வலுப்படும் என்றும், வேறு எந்தச் சூழலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan