Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

14 தை 2026 புதன் 11:48 | பார்வைகள் : 777


ஏப்ரல் மாதம் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்தார்.  

இதேவேளை, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் விலை அதிகரிக்கும் போது, விவசாயிகள் அவற்றை பயிரிடச் செல்வதால் வெள்ளை பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும்.

ஆகையால் நெல் விலை அதிகரிப்பதாயின், இந்த மூன்று வகைகளுக்கும் விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும்.

பண்டிகை காலத்தில் சம்பா மற்றும் கீரி சம்பா விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்