பொங்கல் ஸ்பெஷல் ..கதம்ப குழம்பு.!
14 தை 2026 புதன் 08:30 | பார்வைகள் : 145
பொங்கல் பண்டிகை நாளன்று அந்த சீசனில் கிடைக்கும் நாட்டுக் காய்கறிகளை ஒன்றாகச் சேர்த்து செய்யப்படும் சிறப்பு உணவுதான் பல காய் கதம்ப குழம்பு. பொதுவாக 21 வகை காய்கறிகள் சேர்த்து செய்வது வழக்கம். அவை கிடைக்காத நேரங்களில் 7, 9 போன்ற ஒற்றை எண்ணிக்கையில் கிடைக்கும் நாட்டுக் காய்களை பயன்படுத்தியும் இந்த குழம்பை தயாரிப்பார்கள்.
இந்த குழம்பு வேறுபட்ட முறைகளில் செய்யப்படுகிறது. சில இடங்களில் பருப்பு சேர்க்காமல் காரக் குழம்பாகவும், சில இடங்களில் துவரம்பருப்பு சேர்த்து சாம்பார் போலவும் தயாரிப்பார்கள். பொங்கல் படையலுக்காக மிளகு, சீரகம் சேர்க்காமல் செய்யப்படும் வெண் பொங்கலுடன் இந்த பல காய் குழம்பு சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவை தனித்துவமாக இருக்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது கட்டாயமாக அனைத்து வீடுகளிலும் இந்த குழம்பு செய்யப்படுகிறது.
இதற்கு சௌசௌ, கத்தரிக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், அவரை, கொத்தவரங்காய், மாங்காய், பூசணிக்காய் வகைகள், சேனை, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய், உருளை, சர்க்கரை வள்ளி, முள்ளங்கி, கேரட், பீன்ஸ், நூல்கோல், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு, மொச்சை பயறு, பச்சை வேர்க்கடலை போன்ற பல நாட்டுக் காய்கறிகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
துவரம்பருப்பை ஊற வைத்து பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியுடன் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் அனைத்து காய்கறிகளையும் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து, அரை பதத்தில் புளித் தண்ணீர், மொச்சை பயறு, வேர்க்கடலை சேர்க்க வேண்டும். தனியாக வறுத்து அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் கடைந்த பருப்பை சேர்த்து கலக்கி, தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் தாளித்து கொட்டினால் மணமிகுந்த கதம்ப குழம்பு தயார்.
பருப்பு சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும், பொங்கல் அன்று வெண் பொங்கலுடன் இந்த கதம்ப குழம்புசேர்ந்து வரும் சுவை தான் பொங்கல் திருநாளின் உண்மையான அடையாளம்.சூடான சாதத்துடன் சாப்பிடலாம். வெண் பொங்கல், சர்க்கரை பொங்கலுடன் சேர்த்து பரிமாறலாம். இட்லி, தோசை, உப்புமா போன்ற காலை உணவு வகைகளுடனும் உகந்ததாக இருக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan