Paristamil Navigation Paristamil advert login

பரிசில் இருந்து உழவு இயந்திரங்களோடு வெளியேறும் விவசாயிகள்!!

பரிசில் இருந்து உழவு இயந்திரங்களோடு வெளியேறும் விவசாயிகள்!!

14 தை 2026 புதன் 08:11 | பார்வைகள் : 442


விவசாய அமைச்சருடனான சந்திப்பின் பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பரிசை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

இன்று ஜனவரி 14, அதிகாலையில் இருந்து அவர்கள் பரிசை விடு வெளியேற ஆரம்பித்துள்ளனர். FNSEA மற்றும் JA எனும் இரு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறமை அறிந்ததே. இந்நிலையில், 'அவசர விவசாயநலச் சட்டம்' (« loi d’urgence agricole ») ஒன்றை இயற்றுவதாக பிரதமர் Sébastien Lecornu உறுதியளித்திருந்தார். அதை அடுத்தே விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.

அதேவேளை, €300 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய திட்டம் ஒன்றையும் பிரதமர் முன்மொழிந்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்