Paristamil Navigation Paristamil advert login

போட்டியில் இயக்குனர் அட்லி, லோகேஷ் கனகராஜ்?

போட்டியில்   இயக்குனர் அட்லி, லோகேஷ் கனகராஜ்?

13 தை 2026 செவ்வாய் 13:10 | பார்வைகள் : 224


தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, எவர் கிரீன் படங்களைக் கொடுத்த இயக்குனர்கள் பெற்ற சம்பளத்தை விடவும், மாஸ் ஹீரோக்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள்தான் அதிக சம்பளம் பெறுவார்கள். அது இந்தக் காலத்திலும் தொடர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக 100 கோடி சம்பளத்தைப் பெற்றுள்ள இயக்குனர் அட்லி என்கிறார்கள். அவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்திற்கு அவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

அவருக்கு அடுத்து அதே அல்லு அர்ஜுனை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் அதிக சம்பளம் பெறப் போவதாகத் தகவல். அல்லு அர்ஜுனின் 23வது படமாக உருவாக உள்ள அந்தப் படத்திற்காக லோகேஷ் 75 கோடி சம்பளம் கேட்டாராம். அதற்கு தயாரிப்பு நிறுவனம் சரி என்று சொல்லிவிட்டதாக டோலிவுட்டில் சொல்கிறார்கள்.

இந்திய அளவில் தற்போது எஸ்எஸ் ராஜமவுலிதான் அதிகம் சம்பளம் பெறும் இயக்குனராம். அவருடைய சம்பளம் 200 கோடி எனத் தகவல். அடுத்து 'அனிமல்' படத்தை இயக்கி தற்போது பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தை இயக்கும் சந்தீப் ரெட்டி வங்கா. அவருடைய சம்பளம் 100 கோடிக்கு மேல் என்கிறார்கள்.

'புஷ்பா' படத்தை இயக்கிய சுகுமார், மற்றும் ஹிந்தி இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் சுமார் 75 கோடி சம்பளம் பெறுகிறார்களாம் இவையனைத்தும்  அதிகாரப்பூர்வமற்ற சம்பளத் தகவல்கள். 

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்