Paristamil Navigation Paristamil advert login

விவசாயிகளின் கோபம்: நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் பரிஸில் ஆர்ப்பாட்டம்!!

விவசாயிகளின் கோபம்:  நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் பரிஸில் ஆர்ப்பாட்டம்!!

13 தை 2026 செவ்வாய் 08:20 | பார்வைகள் : 1855


ஜனவரி 13 செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணியளவில் காவல்துறையினரின் அறிக்கையின்படி , FNSEA (தேசிய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு) மற்றும் இளம் விவசாயிகளைச் சேர்ந்த சுமார் 150 டிராக்டர்கள் பரிஸுக்குள் நுழைந்துள்ளன. 

சோம்ப்ஸ்-எலிசே உட்பட தலைநகரின் முக்கிய சாலைகளில் பயணித்து, குவாய் டி'ஓர்சே (வெளியுறவு அமைச்சகம்) முன் ஒரு பேரணியை நடத்த உள்ளன. உணவு இறையாண்மையைப் பாதுகாக்க “உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கை” கோருவதற்காக, இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தையும் அண்டை பிராந்தியங்களில் உள்ள துறைகளையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பான FRSEA இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மெர்கோசூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை குறிப்பாகக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை பராகுவேயில் திட்டமிடப்பட்டிருந்த EU-Mercosur ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, விவசாயிகள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர், பிரான்சின் முன்னணி வணிக துறைமுகமான Le Havre (Seine-Maritime) இல் முற்றுகைகள் அமைக்கப்பட்டுள்ளன. Bayonne (Pyrénées-Atlantiques) மற்றும் La Rochelle (Charente-Maritime) போன்ற துறைமுகங்களும் விசவசாயிகள் முற்றுகை இட்டுள்ளனர்.

"விவசாயிகளின் கோபம் ஆழமானது, அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை, அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் நாங்கள் அவற்றைக் கேட்கிறோம்" என்று விவசாய அமைச்சர் அன்னி ஜெனவர்ட் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்