நேட்டோ அமைப்பை காப்பாற்றியதாக டிரம்ப் பெருமிதம்
13 தை 2026 செவ்வாய் 05:13 | பார்வைகள் : 205
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில், வடக்கு அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனம்(NATO) என்ற அமைப்பை தான் பாதுகாத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணியில் அமெரிக்கா வலுவாக இருக்கும் என்று டிரம்ப் உறுதியளித்தாலும், மீண்டும் மற்ற உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்த சந்தேகங்களை டொனால்ட் டிரம்ப் எழுப்பியுள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் அமெரிக்கா துணை நிற்கும்.
ஆனால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என்றால் நேட்டோ கூட்டணியில் உள்ள நாடுகள் அதே அளவிலான பாதுகாப்பை தருமா என்பதில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சமீப காலமாக கிரீன்லாந்து தங்கள் நாட்டிற்கு சொந்தமானது என கூறி வரும் நிலையில், கிரீன்லாந்து இறையாண்மைக்கும், அந்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் கிரீன்லாந்தின் பாதுகாப்பு பலப்படுத்த நேட்டோ தயாராக இருப்பதாக அல்பாரஸ் எச்சரிக்கை விடுத்த நிலையில் டிரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
கிரீன்லாந்தை அடையும் முயற்சி எளிமையான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ அடையப்படும் என்று டிரம்ப் அதிரடியாக தெரிவித்து இருந்தார்.
மேலும் இது தொடர்பாக டென்மார்க் அதிகாரிகளை அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan