Paristamil Navigation Paristamil advert login

சராசரியாக 13 ஆண்டுகள் விதவையாக வாழும் பிரெஞ்சுப் பெண்கள்!

சராசரியாக 13 ஆண்டுகள் விதவையாக வாழும் பிரெஞ்சுப் பெண்கள்!

10 மார்கழி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 103


பிரான்சில் மூன்றில் ஒரு பெண் சராசரியாக 13 ஆண்டுகள் விதவையாக வாழ்கிறார்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பல்வேறு காரணிகளால் இது அமைகிறது.

ஆண்களை விடவும் பெண்கள் அதிக காலம் வாழ்வதாகவும், பெண்கள் சராசரியாக தங்களது 57 வயதில் கணவர்களை இழப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கணவனை இழந்த பின்னர் சராசரியாக 13 ஆண்டுகள் வரை அவர்கள் விதவையாக வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரையான ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.

இந்த விதவையாக வாழும் அந்திமகால வாழ்க்கையில் அவர்கள் மன உளைச்சலையும், பொருளாதார நெருக்கடிகளையும், வாழ்க்கை மீதான வெறுப்பையும், தனிமை போன்ற அழுத்தங்களையும் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் மனைவியை இழந்த ஆண்களின் எண்ணிக்கையும், அவர்கள் மிகுதி காலத்தின் அளவையும் - விட பெண்கள் அதிகமாக உள்ளதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மேற்படி ஆய்வினை l’Institut national d’études démographiques (Ined)  நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்