சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் பகீர்! - எட்டுவயது சிறுவனுக்கு மொட்டை அடித்து தண்டனை! - விசாரணை!!
9 மார்கழி 2025 செவ்வாய் 18:20 | பார்வைகள் : 5174
சிறுவர் பராமரிப்ப்பு நிலையம் ஒன்றில் எட்டு வயது சிறுவனதை தலையை மொட்டை அடித்து தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இச்சம்பவம் கடந்த பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்றது. இருந்தபோதும் அதன் புகைப்படங்கள் தற்போதே வெளியே கசிந்துள்ளன. அதை அடுத்து பல ஊடகங்கள் இது தொடர்பில் தங்களது கண்டனங்களை வெளியிட, பரிஸ் நகரசபை இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த மாணவனுக்கு தண்டனை அளிக்கும் நோக்கில், பல மாணவர்களின் முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், பல மாணவர்கள் இது மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் துரிதகதியில் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan