அவதானம் பிஸ்கட் மீளப்பெறப்படுகிறது!
9 மார்கழி 2025 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 2940
பல்பொருள் அங்காடிகளில் விற்பனையாகும் இத்தாலியின் Sapori பிஸ்கட்டுகளில் அதிகளவான நச்சுத்தன்மை கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவற்றை உண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Carrefour, Leclerc மற்றும் Auchan ஆகிய பல்பெருள் அங்காடிகளில் கிடைக்கும் இந்த பாதாம் சுவை சேர்க்கப்பட்ட சிறிய பிஸ்கட்டில் ஹைட்ரோசியானிக் (hydrocyanic) எனும் வேதிப்பொருள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் உள்ளதாகவும், இதனால் அதனை உட்கொள்ளும் போது மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
175 கிராம் எடையுள்ள Amaretti Almonds பொதி, (GTIN இலக்கம் (பார்கோட் அருகே பார்வையிடவும்) 8000895003379 கொண்ட இந்த பொதிகளிலேயே இந்த நச்சுத்தன்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஜூலை 4, 2026 காலாவதி திகதி கொண்ட பொதிகள்)
அவற்றை வாங்கியிருந்தால் அதனை உட்கொள்ள வேண்டாம் எனவும், அவற்றை கடைகளில் கொடுத்து மீள பணத்தினை பெற்றுக்கொள்ளவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan