Paristamil Navigation Paristamil advert login

குடிவரவாளர்களை திருப்பி அனுப்ப - ஐரோப்பிய ஒன்றியம் புதிய வரைவு!

குடிவரவாளர்களை திருப்பி அனுப்ப - ஐரோப்பிய ஒன்றியம் புதிய வரைவு!

9 மார்கழி 2025 செவ்வாய் 09:20 | பார்வைகள் : 2476


நல்லதும் - கெட்டதுமாக கொண்ட புதிய குடியேற்ற விதிகள் அடங்கிய வரைவு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கியுள்ளது. அதன்ப்படி, குடிவரவாளர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பில் மேலும் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று டிசம்பர் 8 ஆம் திகதி திங்கட்கிழமை Brussels நகரில் இடம்பெற்ற சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர் இந்த முன்மொழிவை அறிவித்தார்.

முக்கிய புள்ளிகள்!

குடியேற்றவாதிகளின் சொந்த நாட்டில் பயங்கரவாதம் /ஆபத்து இல்லாவர்கள் மற்றும் குடியேற விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் குடும்ப தொடர்புகள் அல்லது, வேலை போன்ற தொடர்புகள் இல்லாதவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

நாடொன்றில் குடியேற்றம் நிராகரிக்கப்பட்ட காரணத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து, அவர்களை பிற ஐரோப்பிய நாடுகளில் குடியேற்ற ஆவண செய்தல்.

குற்றச்செயல்களில் தொடர்புடைய, அல்லது பிறகாரணங்களால் குடியேற்றம் நிராகரிக்கப்பட்ட நபர் ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த நாட்டிலும் குடியேற்ற அனுமதி அளிக்கப்படுவதை இந்த சட்டம் தடுக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, குடியேற்றவாதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு ஒருவருக்கு 20,000 யூரோக்கள் வரை உதவி வழங்கவும் ஒன்றியம் சம்மதித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்