Paristamil Navigation Paristamil advert login

காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் 54 ஜோடிகளுக்கு திருமணம்

காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் 54 ஜோடிகளுக்கு திருமணம்

9 மார்கழி 2025 செவ்வாய் 07:57 | பார்வைகள் : 119


காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் இடம்பெற்ற திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இரண்டு வருட போருக்குப் பிறகு நம்பிக்கையின் ஒரு தருணத்தில் காசாவில் ஐம்பத்து நான்கு ஜோடிகள் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசாவில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாஸ்தீனர்கள் பலியானதுடன், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினிச்சாவும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது.

 

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் காசா மீதான இஸ்ரேலின் தொடுத்த போரில் 70,360 பேர் உயிரிழந்த நிலையில் 171,047 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலைய்ல் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும் 373 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் ஐம்பத்து நான்கு ஜோடிகளுக்கு இடம்பெற்ற திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்