சென்னையில் இன்று இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார் மோகன் பகவத்
9 மார்கழி 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 2723
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், நான்கு நாள் தமிழக பயணமாக நேற்றிரவு சென்னை வந்தார்.
ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டை ஒட்டி, நாடு முழுதும் பல் வேறு நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு நடத்தி வருகிறது. டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடந்த கலந்துரையா டல் நிகழ்ச்சிகளில், மோகன் பகவத் பங்கேற்றார்.
வெளிநாட்டு தூதர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிக ளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை, திருவான்மி யூசில் உள்ள ராமச்சந் திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் இளைஞர்கள் கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியில் பங் கேற்க 1,500 இளை ஞர்கள் பதிவு செய் துள்ளதாக ஆர்.எஸ். எஸ்., தெரிவித்துள்ளது. சென்னை சேத்துப் பட்டு, ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைமை அலுவ லகத்தில் தங்கும் அவர், அமைப்பு ரீதியான கூட்டங்களில் கலந்து கொள்கிறார். நாளை திருச்சி செல்லும் அவர், அங்கு ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளை முடித்து, வரும் 11ம் தேதி கொல்கட்டா செல்கிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan